தக்காளி செடியை
வளர்க்க நினைக்கிறீங்களா?
ஆசைக்காகவும், அழகுக்காகவும் வீட்டு தோட்டத்தில் வைக்கும் பூச்செடிகளோடு, சமையலில் பயன்படும் ஒரு சில செடிகளையும் வளர்ப்போம். அதிலும் காய்கறிகளை தோட்டத்தில் வளர்த்து உண்டால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் நாமே நமது கண்களுக்கு முன் அந்த காய்களை வளர்ப்பதால், எந்த கவலையும் இல்லாமல் அதனை சாப்பிடலாம். சமையலில் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளான தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை அனைத்து உணவிலும் சேர்ப்போம். அதில் தக்காளி செடி வளர்ப்பது தான் மிகவும் எளிது. அதனை வளர்க்க நாம் தக்காளி செடியை கடைகளில் வாங்கி அல்லது சமையலுக்காக கடைகளில் வாங்கும் தக்காளியில் இருக்கும் விதைகளை வைத்து வளர்க்கலாம். அது எப்படியென்று படித்து பாருங்களேன்... விதைகளை தேர்ந்தெடுக்கும் வழிகள்... * முதலில் தக்காளியின் விதைகளை தேர்ந்தெடுக்கும் போது சரியான விதைகளை பார்த்து தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும். ஒரு சில தக்காளிகள் கெமிக்கல்கள் சேர்த்து பெரிதாக்கப்பட்டிருக்கும். ஆகவே அத்தகைய தக்காளியில் இருக்கும் விதைகளை வைத்தால் செடியானது வளராது. அதிலும் அத்தகைய தக்காளியைப் பார்த்தாலே நன்கு தெரியும். எனவே சரியான தக்காளியை வாங்கி அதில் இருக்கும் நல்ல விதைகளை வைக்க வேண்டும். * தக்காளியில் இருக்கும் நல்ல விதைகளை மட்டும் தேர்ந்தெடுக்க, தக்காளியை எடுத்து அதனை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதைகளை தனியாக எடுத்து, ஒது பௌலில் போட்டு, அதில் இருக்கும் வழுவழுப்பாக இருப்பதை எடுத்துவிட்டு, விதைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் இருக்கும் சிறிய மற்றும் பெரிய விதைகளை பிரித்து, சிறியவற்றில் இருக்கும் நல்ல விதைகளை எடுத்து தனியாகவும், பெரிய விதையில் இருக்கும் நல்ல விதைகளை தனியாகவும் பிரித்து எடுக்கலாம். * விதைகளை நொதிக்க வைத்து விதைக்க வேண்டும். அதற்கு நல்ல விதைகளை பௌலில் போட்டு, 2-3 நாட்கள் விட்டு விடவும். எப்போது விதைகளின் மேல் ஒரு வார்ப்பானது உருவாகிறதோ, அப்போது விதையானது நன்கு நொதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இவ்வாறு நொதித்த விதைகளை விதைத்தால், பிற்காலத்தில் செடியை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்கும். மேலும் விதைகளை நன்கு நொதிக்க வைத்தப்பின்னர், அதனை நன்கு சுத்தமான நீரால் கழுவ வேண்டும். பிறகு அதில் சிறிது வினிகர் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது கெட்டுப்போன விதைகள் அனைத்தும் மேலே வந்துவிடும், பிறகு அதனை எடுத்துவிட்டு, நல்ல விதைகளை நன்கு காய வைக்க வேண்டும். விதைத்தப் பின்னர்... * பிறகு காய வைத்த தக்காளியின் விதைகளை ஒரு பிளாஸ்டிக் பைகளில் போட்டு 1-2 வாரங்கள் கட்டி வைக்க வேண்டும். * பின்பு சிறிய தொட்டிகளில் விதைகளை பிரித்து போடவும். ஏனெனில் அப்போது தான் செடியானது ஈஸியாக வளரும். அதுவும் விதைகளை 1/4 இன்ச் ஆழத்தில் புதைத்து வைத்து, பின் தேவையான தண்ணீர் விட்டு, தனியாக வைத்துக் கொள்ளவும். புதைத்து வைத்த அந்த விதையானது முளைக்க ஒரு வாரம் ஆகும். மேலும் எப்போது அந்த தொட்டியில் தண்ணீர் பசையானது இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் அந்த தொட்டியை சற்று வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவும். ஏனெனில் சூரிய ஒளி விதைகள் வளர போதிய சத்துக்களை அழிக்கும். அதற்காக நேரடியாக சூரிய ஒளிபடும் இடங்களில் வைக்கக் கூடாது. வேண்டுமென்றால் 2-3 மணிநேரம் நேரடியான சூரிய வெளிச்சத்தில் படும் படி வைத்து, பின்னர் நிழலில் வைக்க வேண்டும். * எப்போது செடியானது 2-3 இன்ச் வளர்ந்து, கொஞ்சம் இலைகளை விடும்போது, அதனை தொட்டியில் இருந்து தோட்டத்தில் வைத்து விடலாம். அவ்வாறு வைக்கும் போது மறக்காமல் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் தக்காளி செடிக்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே தவறாமல் தண்ணீரை ஊற்ற வேண்டும். * தேவையில்லமல் அடிக்கடி அதனை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் வெட்டாமல் இருப்பது நல்லது. வெட்டினால் தான் செடிகள் வளரும் என்று சொல்வர். ஆனால் அது இந்த செடிக்கு தேவையில்லை. இவ்வாறெல்லாம் செய்தால் தக்காளி செடியானது நன்கு வளர்வதோடு, எந்த ஒரு பூச்சியும், நோயும் தாக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.
Read more at: http://tamil.boldsky.com/home-garden/gardening/2012/steps-grow-tomato-plant-from-seeds-001658.html

No comments:
Post a Comment