Shop on Amazon

Tuesday, October 29, 2013

நோய்களை நீக்க வாழை பழம்


நோய்களை நீக்க வாழை பழத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?

 நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத் தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கி றது. கர்ப்பிணிகள் வாழைப் பழம் சாப்பி ட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க் கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச் சிக்க லைத் தடுக்கும். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமை கிறது வாழைப்பழம்.
உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் 
செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிக மான பொட்டா சியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச் சிக்கு சாப்பிடச் சொல்வா ர்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்ப தால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத் துக்குச் சிறந்தது. கால்களில் ஆடு சதை யில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறை வால் வருகி றது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதை த் தடுக்கலாம்.


பூவன் :
இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூல நோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது. 
 
 
 
 
 
 பேயன் பழம் :
குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படு பவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும். மலைவாழை :
சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டா க்கி மலச் சிக்க லைப் போக்குகிறது இந்த மலைவாழை. ரஸ்தாலி :
இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ் வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சை வாழை:
வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப் படுத் தும். வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவ துடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக் கொ ண்டு வரப் பயன்படுகிறது. தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கரு மிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும். காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழி ந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இரு ந்து படிப்படி யாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகிய வற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.
பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தின மும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூல நோய் தீரும்.
காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உட னே சாப்பிடுங்கள்.ஒருமுறை அறிந்ததும் அறியாததும் பக்கத்திற்கு வந்து பாருங்கள்…..

Thanks :http://vidhai2virutcham.com

No comments:

Post a Comment